புத்தளம் மஹகும்புக்கடவல பிரதேசத்தில் வீட்டின் மின்சார கட்டணம் அதிகரித்துள்ளதாகக் கூறி மின் பட்டியல் கொடுக்கும் நபரை கட்டையால் தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
தாக்குதலில் படுகாயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஹலாவத்த மின் பொறியியல் காரியாலயத்தில் கடமையாற்றும் நபரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் நடத்திய நபர் நேற்று (15) கைது செய்யப்பட்டதாகவும், கைது செய்யப்பட்ட இந்த நபர் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.