2022 பாடசாலை கல்வியாண்டின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளின் இரண்டாம் கட்டம் நாளையுடன் (20) நிறைவடைகின்றது.
தமிழ், சிங்களப் பாடசாலைகள் அனைத்துக்கும் இவ்வாறு விடுமுறை வழங்கப்படுவதோடு, உயர் தரப் பரீட்சை நிலையங்களாக செயற்படும் முஸ்லிம் பாடசாலைகளுக்கும் இவ்வாறு விடுமுறை வழங்கப்படுகிறது.
முஸ்லிம் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் பெப்ரவரி 7 ஆம் திகதிவரை தொடரும்.
கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாகவும் 2022 ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் மூன்றாம் கட்ட செயற்பாடுகளுக்கான கற்றல் நடவடிக்கைகள் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
முஸ்லிம் பாடசாலைகளுக்கான விடுமுறையில் மாற்றம்
ஏற்கனவே 2022.10.21 ஆம் திகதி அறிவிக்கப்பட்ட முஸ்லிம் பாடசாலைகளுக்கான தவணைக் கலண்டரில் கல்வி அமைச்சு மாற்றம் செய்து அறிவித்துள்ளது.
முன்னர் அறிவிக்கப்பட்டதன் படி, 2023.2.15 இல் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் முடிவடைந்து 2023.03.01 ஆம் திகதி மூன்றாம் தவணையின் மூன்றாம் கட்டம் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், புதிய அறிவிப்பின் படி பின்வருமாறு மூன்றாம் தவணையின் ஏனைய கட்டங்கள் நடைபெறும்.
மூன்றாம் தவணை, இரண்டாம் கட்டம் – 2023.02.01 திங்கள் முதல் 2023.02.06 திங்கள் வரை நடைபெறும்
மூன்றாம் கட்டம் – 2023.02.20 திங்கள் முதல் 2023.03.21 செவ்வாய் வரை நடைபெறும்.
2023.02.07 – முதல் 2023.2.19 வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும்