ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை சாட்சியங்கள் திறந்த நீதிமன்றத்திற்கு பதிலாக நீதவான் அறைக்கு அழைக்கப்பட்டன.
அதன்படி, ஆதாரங்களை ஊடகங்களுக்கு திறக்காமல் மறைமுகமாக பெறப்பட்டு வருகிறது.
பிரேத பரிசோதனை சாட்சியம் கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரியவின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் அழைக்கப்பட்டு இன்று மதியம் 12.30 மணியளவில் ஆரம்பமானது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில் சாட்சியமளிப்பதற்காக தினேஷ் ஷாப்டரின் மனைவி கிறிஸ் பெரேரா, அவர்களது நிறுவனமொன்றின் பணிப்பாளர் மற்றும் பொரளை கல்லறை தோட்ட ஊழியர்கள் இருவரும் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.