ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கடந்த 8ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் எதிர்வரும் 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
நேற்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, பாராளுமன்றம் எதிர்வரும் 9ஆம் திகதி காலை 9.30 மணிக்கு கூடி கடந்த அமர்வில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 51 யோசனைகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படவுள்ளது.