இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்வது என்பது மலையை சாய்ப்பது போல கடினமானது: ஸ்டீவ் ஸ்மித்!

Date:

இந்தியா – ஆவுஸ்திரேலியா அணிகள் மோதும் பாா்டா் – காவஸ்கா் கிரிக்கெட் தொடா், டெஸ்ட் ஆட்டத்துடன் நாளை வியாழக்கிழமை  (09) ஆரம்பமாகவுள்ளது.

4 டெஸ்ட், 3 ஒரு நாள் ஆட்டங்கள் அடங்கிய இந்தத் தொடா்களில், டெஸ்ட் எப்போதுமே முக்கியமான ஒன்று.

இங்கிலாந்திற்கும் ஆவுஸ்திரேலியாவிற்கும் கடுமையான போட்டி என்றால் அது ஆஷஸ் தொடர்தான். அதேபோல் ஆவுஸ்திரேலியாவிற்கு இந்தியாவின் பார்டர் கவாஸ்கர் கோப்பை முக்கியமானது. ஏனெனில் இந்தியா, ஆவுஸ்திரேலியாவை இந்தத் தொடரில் ஆதிக்கம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

நாளை 9-ஆம் திகதி நடைபெறும் இந்தப் போட்டிக்கு சமூக வலைதளங்களில் விவாதங்கள் சூடுபிடித்துள்ளது. ஆவுஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்டர் ஸ்டீவ் ஸ்மித் டெஸ்டில் 15,901 ரன்களை கடந்துள்ளார். 30 சதங்களும் 4 இரட்டை சதங்களும் அடித்துள்ளார்.

ஸ்டீவ் ஸ்மித் இது குறித்து மேலும் கூறியதாவது: 

இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்வது என்பது மலையை சாய்ப்பது போல கடினமானது. ஸ்பின் அதிகமாக இருக்கும் இந்திய மண்ணில் இந்தியாவை டெஸ்டில் வீழ்த்துவது என்பது ஆஷஸ் தொடரை வெல்வதை விடப் பெரியது.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...