இலங்கையில் மிகவும் விலை உயர்ந்த ரயில் பயணம்!

Date:

கொழும்பிலிருந்து பதுளை வரையான புதிய சொகுசு ரயில் சேவை எதிர்வரும் பெப்ரவரி 14 ஆம் திகதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வழங்கப்படவுள்ளது.

புதிய சொகுசு ரயில் சேவை பிரதி செவ்வாய் கிழமைகளில் கொழும்பிலிருந்து காலை 5.30 மணிக்கு புறப்பட்டு எல்ல ஊடாக மாலை 4.00 மணிக்கு பதுளையை அடையவுள்ளது. மீண்டும் மறுநாள் காலை 6.00 மணிக்கு புறப்பட்டு மாலை 6.00 மணிக்கு கொழும்பை வந்தடையும்.

இந்த ரயிலில் பயணம் செய்வதற்கான டிக்கெட் விலை $99.99 டொலர் ஆகும். பணத்திற்கேற்ற சிறந்த அனுபவமும் சேவையும் கிடைக்கும் என்றும் நட்சத்திர வகுப்பில் காலை உணவு, மதிய உணவு மற்றும் தேநீர் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணத்தின் போது ரம்புக்கனை, பேராதனை சந்தி, நாவலப்பிட்டி, ஹட்டன், சென்ட் கிளேர் நீர்வீழ்ச்சி, நானுஓயா எல்ஜின் நீர்வீழ்ச்சி, பட்டிப்பொல புகையிரத நிலையம் ஆகிய பிரதேசங்களில் புகையிரதம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த அழகிய பயணத்தின் போது கண்டி புகையிரத நிலையத்தில் கலை கலாசார நிகழ்ச்சியை காணும் வாய்ப்பும் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கிராம உத்தியோகத்தர் தாக்கப்பட்டமையை கண்டித்து முசலியில் ஆர்ப்பாட்டம்!

முசலி பிரதேச கிராம உத்தியோகத்தர்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றமையை கண்டித்து இன்று (31)...

கொழும்பு மாநகர சபை வரவு-செலவுத்திட்ட வாக்கெடுப்பு; மு.கா உறுப்பினர் இடைநீக்கம்

முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஜோஹாரா புஹாரி...

மினுவாங்கொடை நகர சபை மேயர் இராஜினாமா!

தேசிய மக்கள் சக்தியின் மினுவாங்கொடை நகர சபை மேயரான அசேல விக்ரமாராச்சி,...

இஸ்ரேலில் தாதியர் பராமரிப்புத் துறையில் 738 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகள்!

இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் நேற்று (30) வரையிலான காலப்பகுதியில்,...