‘இலங்கை மக்களும் துருக்கியரின் துயரத்தில் பங்குகொள்கின்றனர்’: இரங்கல் பதிவில் இம்தியாஸ் பாக்கிர்

Date:

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்  இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்  இன்று(09) கொழும்பில் உள்ள இலங்கைக்கான துருக்கி இராச்சியத்தின் தூதுவர் திருமதி ரகிபே டெமெட் செகேர்சியொக்லு அவர்களைச் சந்தித்துள்ளார்.

நிலநடுக்கத்தால் பேரழிவை சந்தித்துள்ள துருக்கி அரசாங்கத்திற்கும் துருக்கி மக்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்ததோடு,அனுதாப பதிவேட்டிலும் தமது குறிப்பை பதிவிட்டார்.

இதன்போது  துருக்கி அரசுக்கும் துருக்கி மக்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததோடு, துருக்கி மக்கள் இழந்த தமது அன்புக்குரியவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது பிரார்த்தனைகளையும் பதிவிட்டார்.

கருணையுள்ள துருக்கி மக்கள் தனியாக இல்லை என்பதையும்,உலக நாடுகளுடன் இணைந்து இலங்கை வாழ் மக்களும் துருக்கியரின் துயரத்திலும் தேவையிலும் அவர்களுடன் முன்நிற்கிறோம்.

பிரிந்து சென்ற ஆன்மாக்களுக்கு அல்லாஹ் கருணை புரியட்டும் எனவும்,அவர்கள் விட்டுச் சென்றவர்களுக்கு சாந்தியை வழங்குவானாக எனவும் தமது குறிப்பில் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்துள்ளார்.

கடந்த 50 வருடங்களில் துருக்கி சந்தித்த மிக மோசமான நிலநடுக்கமாகவும், பேரழிவாகவும் இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...