கண்டியில் நாளை குடியரசு பெரஹெர: விசேட போக்குவரத்து திட்டம்!

Date:

கண்டியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையில் 34 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் ஐந்தாவது முறையாக குடியரசு பெரஹெர, நாளை கண்டியில் நடைபெறவுள்ளது.

75 ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்துடன் இணைந்ததாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இதன் ஆரம்ப நிகழ்வு நடைபெறவுள்ளது.

நாளை மாலை 6.30 மணிக்கு கண்டி மங்களகூடத்தில் இருந்து ஆரம்பிக்கும் பெரஹெர, தலதா வீதி, யட்டிநுவர வீதி, கந்த வீதி வழியாக ரஜ வீதியில் பிரவேசித்து மீண்டும் தலதா மாளிகையை வந்தடையும் என தலதா மாளிகை இணைப்பாளர் மற்றம் கலாசார அதிகாரி ஜெயம்பதி வெத்தகல தெரிவித்தார்.

சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் இம்முறை பெரஹெர ஏற்பாடு செய்யப்படுவதுடன், பெரஹராவை காணவரும் மக்களுக்காக கண்டி பெரஹரா வீதியில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...