காஷ்மீரில் மஞ்சள் நிற பனிப்பொழிவு!

Date:

காஷ்மீரின் வடக்கு பிராந்திய பகுதிகளில் மஞ்சள் நிறத்தில் பனிப்பொழிவை காண முடிந்ததாக பலர் கூறியுள்ளனர்.

வியாழக்கிழமை (09) இரவில் இந்த மாற்றங்களை பலர் கவனித்துள்ளனர்.

இது குறித்து ஸ்ரீநகர் வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில்,

‘நேற்று முன்தினம் இரவில் மஞ்சள் வண்ணம் மற்றும் புழுதிநிறைந்த பனிப்பொழிவு வடக்கு காஷ்மீரில் சில இடங்களில் தென்பட்டது. மத்திய பாகிஸ்தான் மற்றும் தெற்கு ஆப்கானிஸ்தானில் இருந்து வீசிய காற்று அதிகமான தூசுகளை பனிப்பொழிவுடன் கலந்து இந்த மாற்றத்தை உருவாக்கியதாக கணிக்கப்படுகிறது.

செயற்கை கோள் மூலமும் இது படம்பிடிக்கப்பட்டது. இரவு 7 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை இந்த வானிலை மாற்றம் நீடித்தது’ என்று குறிப்பிட்டுள்ளது.

Popular

More like this
Related

‘முஸ்லிம் ஊடகங்கள்’ குறித்த பிரதி அமைச்சர் முனீர் முழப்பரின் கருத்து மிகவும் கண்டனத்துக்குரியது: முஸ்லிம் மீடியா போரம் அறிக்கை

முஸ்லிம் ஊடகங்களைப் பிரதிநிதித்துவம் செய்வோர் இனவாத சக்திகளுக்குத் துணை போவதாக சமய...

அகமதாபாத் – கொழும்பு இடையிலான நேரடி விமான சேவைகள் இன்று ஆரம்பம்!

அகமதாபாத் மற்றும் கொழும்புக்கு இடையே புதிய நேரடி விமான சேவை இன்று...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது இடியுடன் மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...