ஷ்லேவ் ஐலன்ட் (SLAVE ISLAND) என அழைப்பதற்கு பதிலாக மூன்று மொழிகளிலும் கொம்பனிவீதிய என அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, பொது நிர்வாக, உள்நாட்டாலுவல்கள் மற்றும் மாகாண சபை, உள்ளூராட்சி சபை அமைச்சின் செயலாளருக்கு, பிரதமர் செயலாளர் அநுர திஸாநாயக்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் கொம்பனியவீதிய என அழைக்கப்படுகின்ற போதிலும், ஆங்கிலத்தில் இன்று வரை பிரித்தானிய ஆட்சி காலத்தில் பயன்படுத்திய ஷ்லேவ் ஐலன்ட் (SLAVE ISLAND) என்றே அழைக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், பிரதமர் தினேஷ் குணவர்தனவின் ஆலோசனையின் பிரகாரம், இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மூன்று மொழிகளிலும் கொம்பனிவீதிய என பயன்படுத்துமாறு, தபால் மாஅதிபருக்கும், கொழும்பு மாநகர சபை ஆணையாளருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.