புத்தளத்தை பிறப்பிடமாகக் கொண்ட ,எழுத்தாளரும் நூலாசிரியரும் ஊடகவியலாளரும் அல்ஹசனாத்,எங்கள் தேசம் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியராக நீண்ட காலம் பணியாற்றியவருமான அஷ்ஷெய்க் R .அப்துல்லாஹ் அஸாம் அவர்கள் இன்று கொழும்பில் காலமானார்.
பத்திரிகை துறையில் நீண்ட அனுபவம் வாய்ந்தவரும், பல எழுத்தாளர்களை எழுத்துத் துறைக்கு கொண்டு வருவதற்கு பங்களிப்பு செய்தவரும், பன்முக ஆளுமை கொண்டவருமான இவர், தமிழ் மொழி மூலமான பல நூல்களும், ஆக்கங்களும் வெளிவருவதற்கு நீண்ட காலமாக பங்களிப்பு செய்துள்ளார்.
குர்ஆனிய கலைகள் தொடர்பான இவருடைய நூல் தமிழ் உலகில் மிகவும் பிரபலமானதாகும். அன்னாரின் மறைவையொட்டி “நியூஸ் நவ்” தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறது.
யாஅல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து, அவருடைய கப்றுடைய வாழ்வை ஒளிமயமானதாக ஆக்கி விடுவாயாக!
அவருடைய இழப்பை தாங்கும் சக்தியை அவருடைய குடும்பத்தினருக்கும், நெருங்கியவர்களுக்கும் அல்லாஹ் வழங்குவானாக! இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்…