தஜிகிஸ்தானில் 6.8 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு!

Date:

தஜிகிஸ்தானின் கிழக்குப் பகுதியில் 6.8 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறித்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி அதிகாலை 5:37 மணியளவில்  சுமார் 20.5 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஜின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பிராந்தியம் மற்றும் தஜிகிஸ்தானின் எல்லைக்கு அருகே இன்று  (இலங்கை நேரப்படி மு.ப. 6.07) மணியளவில் சுமார் 7.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக, சீன அரச தொலைக்காட்சியான CCTV, சீன பூகம்ப வலையமைப்பு மையத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் சீன எல்லையில் இருந்து 82 கிமீ தொலைவில் பதிவாகியுள்ளதோடு, ஜின்ஜியாங் பிராந்தியத்தின் மேற்குப் பகுதியில் உள்ள கஷ்கர் மற்றும் ஆர்டக்ஸ் ஆகிய இடங்களில் வலுவாக உணரப்பட்டதாக CCTV தெரிவித்துள்ளது.

இந்நிலநடுக்கத்தின் மையப்பகுதி ஆப்கானிஸ்தான் மற்றும் சீனாவின் எல்லையில் உள்ள அரை-தன்னாட்சி கிழக்குப் பகுதியான கோர்னோ-படக்ஷானில் அவதானிக்கப்பட்டுள்ளது.

 

 

Popular

More like this
Related

நேபாள வெளியுறவு அமைச்சருடன் விஜித்த ஹேரத் தொலைபேசி உரையாடல்: உதவிக்கு தயார்!

நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து நிலவும் சூழல் குறித்து, அந்நாட்டு...

நேபாள மக்களின் துயரத்தில் பங்கெடுக்கும் இலங்கை – ஜனாதிபதி அனுதாபம்!

நேபாளத்தின் கடும் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ஜனாதிபதி அநுர குமார...

கடற்பிரதேசங்களில் பலத்த காற்று

புத்தளம் முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்பகுதிகளில்...

விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பும் சர்வதேச முயற்சியில் கிண்ணியா மாணவி நூரி இணைவு: 27ஆம் திகதி இந்தியா பயணம்!

உலகளாவிய ரீதியில் முதல் முறையாக பெண் மாணவிகள் இணைந்து விண்கலமொன்றை விண்வெளிக்கு...