துருக்கியில் 7 நாள் துக்க தினம் அனுஷ்டிப்பு: துருக்கி தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் அறிவிப்பு!

Date:

துருக்கியில் நேற்று தொடர்ந்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில்,  துருக்கி அரசு 7 நாட்கள் தேசிய துக்க தினம் கடைப்பிடிக்கப்படும் என அறிவித்துள்ளது.

அத்தோடு வரும் 12ம்  திகதி துருக்கி மற்றும் வெளிநாடு பிரதிநிதி அலுவலகங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மீண்டும் துருக்கியில் 5.5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பனிப்பொழிவால் மீட்பு பணியில் ஏற்கனவே தொய்வு ஏற்பட்டுள்ள நிலையில், மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதிகளில் நேற்று 7.8 ரிக்டர், 7.5 ரிக்டர், 6.0ரிக்டர் என தொடர்ந்து மூன்று முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 4000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பதாகவும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கட்டிட இடிபாடுகளை அகற்றி உடல்களை் மீட்கப்பட்டு வருகின்றன. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

Popular

More like this
Related

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...