ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (07) பிற்பகல் துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனுடன் கலந்துரையாடியுள்ளார்.
துருக்கியில் ஏற்பட்டுள்ள அவசர நிலை குறித்து வருத்தம் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் ஆதரவை வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சிக்கியிருப்போரை மீட்கும் பணிக்கு இலங்கை மீட்புக்குழுவையும் அனுப்ப ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.