தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கு சிக்கல்!

Date:

தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதால், சம்பளம் இல்லாமல் விடுமுறையில் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிட செல்லும் அரச ஊழியர்களுக்கு, மூன்று மாதங்களுக்கு சம்பளம் கிடைக்காமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைய இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால், வேட்புமனு தாக்கல் செய்த நாளிலிருந்து மூன்று மாதங்கள் சம்பளம் இல்லாத விடுமுறையில் இருக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், திருத்தம் செய்து அந்த சுற்றறிக்கையை மாற்றுவதற்கு பிரதமருடன் கலந்துரையாடவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அது பின்னர் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...