நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியா மக்களுக்கு கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசலில் விஷேட பிரார்த்தனை!

Date:

துருக்கி மற்றும் சிரியாவில் இடம் பெற்ற நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு காயிப் ஜனாஸா தொழுகையும் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், துருக்கி, சிரியா நாடுகள் வெகு விரைவில் வலமையான நிலைக்கு திரும்பவும் விஷேட துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றன.

இந்நிகழ்வு கொழும்பு 07 தெவட்டகஹ அஷ்-ஷெய்க்ஹ் உஸ்மான் வலியுல்லாஹ் ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்றது.

பள்ளிவாசல் அதிபர் அல்-ஹாஜ் ரியாஸ் சாலி தலைமையில் சமயப் பிரார்த்தனை நடைபெற்றது.

இந்நிகழ்வில், காயிப் ஜனாஸா தொழுகையை அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யத் அலவி மௌலானா முர்ஸி நடாத்தியதுடன் விஷேட துஆ பிரார்த்தனையை அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யத் கலாநிதி ஹஸன் மௌலனா அல்-காதிரி நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் ஸாதாத்மார்கள், உலமாக்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், புத்திஜீவிகள் உட்பட பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

கிழக்கு, வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை நிலைமை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கும்

இலங்கையின் கிழக்கில் உருவாகியுள்ள குறைந்த அளவிலான வளிமண்டலக் குழப்பம் காரணமாக, கிழக்கு,...

பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் பிரதித் தலைவர் தாரிக் ரஹ்மான்- அமைச்சர் விஜித ஹேரத் இடையில் சந்திப்பு.

பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் பிரதி தலைவரும் முன்னாள் பிரதமர் கலேதா ஜியாவின்...

நியூ யார்க் மேயராக மம்தானி பதவியேற்பு:குர்ஆன் மீது சத்தியப்பிரமாணம்

நியூயார்க் நகரின் மேயராக சேர்ந்த ஸோரான் மம்தானி வியாழக்கிழமை அதிகாலை பதவியேற்றுக்...