சலுகை விலையில் மின்சாரம் வழங்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் திங்கட்கிழமை (27) பாரிய தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க ஒன்றியம் இன்று தெரிவித்துள்ளது.
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபை கட்டணத்தை கணக்கிடும் முறையை சிறந்த முறையில் சமநிலைப்படுத்தி நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் முறையை திருத்த வேண்டும் என ஒன்றிய தலைவர் மாலக விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
2022 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் வழங்கப்படாத வருடாந்த போனஸ் மற்றும் மருத்துவ கொடுப்பனவுகளையும் அவர்கள் கோருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“எனவே, மொத்தம் 12 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 6,000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சுகயீன விடுப்புக்கு விண்ணப்பித்து, திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவார்கள், என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், 6,000 இற்கும் அதிகமான ஊழியர்கள் கையொப்பமிட்ட மனுவொன்று அண்மையில் இலங்கை மின்சார சபையின் தலைவரிடம் கையளிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.