மின்வெட்டு இருக்காது: இலங்கை மின்சார சபை உயர் நீதிமன்றத்தில் உறுதி!

Date:

இன்று மின்வெட்டு இருக்காது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சை காலத்தில் மின்வெட்டு இருக்காது என எரிசக்தி அமைச்சின் செயலாளர் மின்சார சபை மற்றும் ஏனைய தரப்பினர் வழங்கிய ஒப்பந்தத்தை மீறியமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது

பரீட்சை காலத்தில் வரை மின்வெட்டு இருக்காது என இலங்கை மின்சார சபை உச்ச நீதிமன்றில் உறுதியளித்துள்ளது.

பிரிதி பத்மன் சூரசேன,  யசந்த கோதாகொட மற்றும்  ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இலங்கை மின்சார சபை மற்றும் ஏனைய தரப்பினர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், முறைப்பாடு தொடர்பில்  ஆலோசனைகளை பெற்றுக் கொள்வதற்கு கால அவகாசம் தேவைப்படுவதால், மனு நாளை (3) அழைக்கப்படும் என நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், இது அவசரமான விடயம் என்பதால், ஒத்திவைப்பது பொருத்தமானதல்ல என நீதிபதி யசந்த கோதாகொட சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த மனுவை வாபஸ் பெற்றபோது, ​​நாளை மறுநாள் மனு பரிசீலிக்கப்படும் வரை மின்சாரத்தை  துண்டிக்க மாட்டோம் என மின்சார சபை  உச்சநீதிமன்றத்தில் உறுதிமொழி அளித்தது.

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...