மின் கட்டண உயர்வுக்கு எதிராக நாளை (20) இரவு 7 மணிக்கு அனைத்து மின்விளக்குகளையும் அணைக்குமாறு மக்கள் உரிமைப் பாதுகாப்பு தேசிய இயக்கத்தின் அழைப்பாளர் அனுருத்த சோமதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும் “நாளை இரவு 7:00 மணிக்கு, டிப் சுவிட்ச் மூலம் உங்கள் வீட்டின் மின் அமைப்பை அணைக்கவும். விளக்குகள், மின்சாதனங்களைப் பயன்படுத்துவதை நிறுத்தவும். மின்கட்டண உயர்வுக்கான எமது எதிர்ப்பை இவ்வாறு அடையாளப்பூர்வமாக வெளிப்படுத்துவோம்”எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை மின்கட்டண அதிகரிப்புக்கு எதிராக மக்கள் உரிமைப் பாதுகாப்புப் படையின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டமொன்று அனுராதபுரம் சதிபொல பிரதேசத்தில் இன்று இடம்பெற்றது.