வடக்கு புகையிரத பாதை அபிவிருத்திப் பணிகளின் போது இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
வவுனியாவிற்கும் அனுராதபுரத்திற்கும் இடையிலான புகையிரத பாதையின் நிர்மாணப் பணிகள் இந்திய நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், அதே நிறுவனம் மேலும் பல நிறுவனங்களுக்கு துணை ஒப்பந்தங்களை வழங்கியுள்ளது.
துணை ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனங்கள் புகையிரத திணைக்களத்தில் பணிபுரியும் சில அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்களுடையது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், இத்திட்டத்திற்கு வழங்கப்பட்ட உபகரணங்களும் காணாமல் போயுள்ளதாகவும் அது தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.