தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட 25 குழுக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கொள்ளுப்பிட்டி, கொம்பனித்தீவு மற்றும் கோட்டை பொலிஸ் பகுதிகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தி ஜனாதிபதி அலுவலகம் மற்றும் பல கட்டிடங்களுக்குள் பிரவேசிக்க எதிர்ப்பாளர்கள் குழுவொன்று திட்டமிட்டுள்ளதாகவும் இதனை தடை செய்ய வேண்டுமெனவும் கோட்டை பொலிஸார் கோட்டை நீதவானிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்படி, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஜனாதிபதி அலுவலகம், ஜனாதிபதி மாளிகை, நிதியமைச்சு மற்றும் காலிமுகத்திடல் பகுதிகளுக்குள் பிரவேசிக்க வேண்டாம் எனவும், பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வீதிகளை மறிக்க வேண்டாம் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.