கொழும்பு இப்பன்வல சந்தியில் தேசிய மக்கள் சக்தியினர் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை மருதானை, வைத்தியசாலை வளாகம், , கொள்ளுப்பிட்டி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பொலிஸ், இராணுவம், கலவர தடுப்பு குழுக்கள், அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.