இன்றும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும்: வசந்த முதலிகே!

Date:

நேற்றிரவு (03) மருதானை எல்பின்ஸ்டோன் திரையரங்கிற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களைக் கலைப்பதற்காக பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

நேற்று மதியம் முதல் எல்பின்ஸ்டோன் திரையரங்கம் முன்பு போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவித்ததையடுத்து, அந்த இடத்தில் தங்கியிருந்த சட்டத்தரணி நுவான் போபகே மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் நீதிமன்ற உத்தரவு குறித்து பொலிஸார் ஒலிபெருக்கி மூலம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தெரிவித்தனர்.

இருப்பினும், போராட்டக்காரர்கள் உத்தரவிற்கு இணங்காததால், பொலிஸார் அவர்களை கலைக்க இரவு 9:00 மணியளவில் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொண்டனர்.

இதேவேளை, சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் (04) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...