இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Date:

இன்று நாடு முழுவதும் மழை நிலைமை சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பலதடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Popular

More like this
Related

“சுதந்திரத்தின் நோக்கங்களைப் பாதுகாப்போம்”: மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் மு.தமிமுன் அன்சாரி வாழ்த்து அறிக்கை!

இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டின் ஜனநாயகக் கொள்கைகளைப் பேணிப்...

இந்திய விடுதலைக்கு ரத்தம் சிந்திய இஸ்லாமியப் பெண்களின் தியாக வரலாறு!

இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில்,...

சுமார் 8 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான பாட நூல்களை பழைய பொருட் கடைகளுக்கு விற்றவர் கைது

கல்வியமைச்சின் வெளியீட்டு திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட சுமார் 8 இலட்சம் ரூபாவிற்கும் அதிக...

80 ஆவது சுதந்திர தின நிகழ்வினை கொண்டாடும் இந்தியா!

இந்தியா இன்று (15) தனது 80 ஆவது சுதந்திர தின நிகழ்வினைக்...