தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததாகக் கூறப்படும் திருமதி சார்ள்ஸ், நேற்று (31) அச்சிடுவதற்காக அனுப்பப்பட்ட உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் கையொப்பமிட்டுள்ளார்.
இளைஞர் வாக்குகள் தொடர்பான தகவல்கள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பில் திருமதி சார்ள்ஸ் கையொப்பமிட்டதாக ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நேற்று (31) அச்சிட அனுப்பப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் கையொப்பமிட்டதன் காரணமாக அவர் தொடர்ந்தும் ஆணைக்குழுவின் உறுப்பினராக இருப்பார் என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.