இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கு வரி விதிக்க கோரிக்கை!

Date:

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கு வரி விதிக்குமாறு கோரி விவசாய அமைச்சின் செயலாளர் நிதி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

விவசாய அமைச்சின் விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் வெலிமடை பொரலந்த பிரதேசத்தில் விதை உருளைக்கிழங்கு அறுவடையில் கலந்து கொண்டு அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டில் உருளைக்கிழங்கு விவசாயிகளையும் உள்ளூர் உருளைக்கிழங்கு பயிர்ச்செய்கையையும் பாதுகாக்கும் நோக்கில் உள்நாட்டு உருளைக்கிழங்கு அறுவடையின் போது வெளிநாடுகளில் இருந்து உருளைக்கிழங்கு இறக்குமதியை தடுக்கும் வேலைத்திட்டத்தை விவசாய அமைச்சு ஆரம்பித்துள்ளதுடன் உருளைக்கிழங்கு இறக்குமதியை தடை செய்வதற்கு பதிலாக இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு முறையும் உள்ளூர் உருளைக்கிழங்கு அறுவடையின் போதும், ஒவ்வொரு அரசாங்கமும் உருளைக்கிழங்கை இறக்குமதி செய்வதால் உள்ளூர் விவசாயிகள் உருளைக்கிழங்கு செய்கையை கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நாட்டில் அதிகளவு பணத்தை முதலீடு செய்து உருளைக்கிழங்கு பயிரிடும் விவசாயிகளை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும், இந்த கடிதத்தை அனுப்பி வைத்தாலும் நிதியமைச்சின் அதிகாரிகள் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எனவே, நாளை (13) நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பான விடயங்களை ஜனாதிபதியிடம் முன்வைக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ், இலங்கையில் விதை உருளைக்கிழங்கு உற்பத்தியை 9 மில்லியனாக அதிகரிப்பதே இலக்காகும் எனவும், தற்போது பொரலந்த பிரதேசத்தில் சுமார் நூறு ஏக்கர் விதை உருளைக்கிழங்கு பயிரிடப்பட்டு வருவதாகவும்,  அமைச்சர் தெரிவித்தார்.

உருளைக்கிழங்கு பயிர்ச்செய்கையை பாதுகாப்பது மட்டுமன்றி தேவையான உருளைக்கிழங்குகளை நாட்டில் உற்பத்தி செய்து உருளைக்கிழங்கு இறக்குமதியை அரசாங்கம் தடுக்கும் என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...