இலங்கைக்கு அவசரமாக நிதியுதவி தேவைப்படுகிறது: அமெரிக்கா

Date:

இந்த தருணத்தில் இலங்கைக்கு மிக அவசரமான நிதி நிவாரணம் தேவைப்படுவதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜேனட் எல். யெலன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் பிற அதிகாரிகள் பங்கேற்ற மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடன் சுமையால் உலகின் பல நாடுகள் பின்தங்குவதைத் தடுக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகளின்படி, குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் சுமார் 55 சதவீத நாடுகள் கடன் ஆபத்தில் உள்ளன என்று அமெரிக்க திறைசேரி செயலாளர் தெரிவித்துள்ளார்.

வளரும் நாடுகள் மற்றும் கடன் நெருக்கடியில் உள்ள நாடுகளுக்கு மிகவும் பயனுள்ள கடன் நிவாரணம் வழங்க சீனா உட்பட அனைத்து இருதரப்பு உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுக்கும் தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜேனட் எல். யெலன் கூறினார்.

மேலும்  இலங்கை மற்றும் சாம்பியாவிற்கு மிக அவசரமான கடன் நிவாரணம் தேவை.இலங்கைக்கான குறிப்பிட்ட மற்றும் நம்பகமான நிதிச் சான்றிதழ்களை வழங்குவது இன்றியமையாதது எனவும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...