இலங்கைக்கு கடனுதவி வழங்குவது குறித்து முதல் வட்டமேசைக் கூட்டம்!

Date:

இலங்கைக்கு கடனுதவி வழங்குவது குறித்த எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறும் முதல் பேச்சுவார்த்தையில் சீனா, இந்தியா, சவூதி அரேபியா மற்றும் ஏழு நாடுகளின் இனைந்த குழுவின் அதிகாரிகள் பங்கேற்பார்கள் என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

எத்தியோப்பியா, சாம்பியா, கானா ஆகிய வருமானம் இல்லாத நாடுகளின் அதிகாரிகளும் இலங்கை, ஈக்வடோர் போன்ற நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் அதிகாரிகளும் இதில் கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் தலைமையில், உலக வங்கி மற்றும் ஜி20 குழுவின் தற்போதைய தலைமையான இந்தியா ஆகியோரால் இணைந்து நடத்தப்படும் இந்த பேச்சுவார்த்தை 25 ஆம் திகதி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இருப்பினும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் வட்டமேசை கூட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர், மேலதிக விவரங்கள் எதிர்காலத்தில் வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...