இலங்கையின் கடன்: சர்வதேச நாணய நிதியத்தின் அழைப்பு

Date:

இலங்கையின் கடன் தொடர்பில், பொதுவான கட்டமைப்பின் கீழ் உரிய நேரத்தில் ஒழுங்கான செயல்முறைகளுக்கு, சர்வதேச நாணய நிதியம் அழைப்பு விடுத்துள்ளது.

இந்தியாவில் பெங்களூரில் நேற்று முடிவடைந்த ஜி20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டத்தின் இறுதியில் இது தொடர்பான அறிக்கையை சர்வதேச நாணய நிதியத்தின் முகாமை பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜொர்ஜீவா விடுத்துள்ளார்.

கடன் கட்டமைப்பை வலுப்படுத்தவும், கடனைத் தீர்க்கும் வேகம் மற்றும் செயல்திறனை மேம்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பல நாடுகளில் தொற்றுநோய்க்கு முன்னரே கடன் பாதிப்புக்கள், உயர்ந்த நிலையில் இருந்தன. இந்தநிலையில் இறையாண்மைக் கடன் பாதிப்புகள், கொரோனா மற்றும் யுக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரிலிருந்து உருவாகும் அதிர்ச்சிகளால் இந்த நிலைமைகள் மோசமடைந்துள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, உலகளாவிய குடும்பத்தின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய உறுப்பினர்களுக்கான தீர்வுகளைக் கண்டறிய சர்வதேச சமூகம் ஒன்றுபட வேண்டிய பொறுப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மிகவும் பாதுகாப்பான மற்றும் வளமான உலகத்திற்காக, நன்கு செயல்படும் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட உலகப் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதே எங்களின் பொதுவான ஆர்வமாகும்,” என்று அவர் கூறினார்.

Popular

More like this
Related

‘உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலம் இலங்கை தான்’: வசீம் அக்ரம் புகழாரம்!

உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக தரப்படுத்தப்படுவதற்கு தகுதியான ஒரு நாடாக இலங்கை விளங்குவதாக...

ஹிஜ்ரி 1448 புத்தாண்டு வழங்கும் செய்தி: இடப்பெயர்வின் வரலாறும் நாட்காட்டியின் முக்கியத்துவமும்!

-Ash-sheikh Hassan Sulaiman (Naleemi) - (fb) காலச்சக்கரத்தின் சுழற்சியில் மற்றுமொரு ஹிஜ்ரி...

கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார,...