இலங்கை சுற்றுலாத் துறைக்கு ஆதரவளிக்கும் இத்தாலி!

Date:

இலங்கையின் பொருளாதார மீட்சி நடவடிக்கைகளைப் இத்தாலி  அரசாங்கம் பாராட்டியுள்ளது.

அதேநேரம் இலங்கைக்கு வருகை தரும் அதிகமான இத்தாலி  சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிப்பதன் மூலம் இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளது.

இத்தாலிக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இத்தாலிய  பிரதி வெளிவிவகார அமைச்சர் எட்மண்டோ சிரியெல்லி மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க ஆகியோருக்கு இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்தை புத்துயிர் பெறவும் வலுப்படுத்தவும் இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் நடவடிக்கைகளை இத்தாலி பாராட்டுவதாக எட்மண்டோ சிரியெல்லி தெரிவித்தார்.

மேலும், இலங்கை மக்களுக்கு இத்தாலியில் வேலை வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் “புலம்பெயர்ந்த தொழிலாளர் திட்டத்தை” நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை துரிதப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இதேவேளை நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு சுற்றுலாத்துறை முதன்மையாக பங்களிப்பதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், இலங்கைக்கு அதிகளவான இத்தாலி  சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கு ஆதரவை வழங்குமாறு இத்தாலிய பிரதி வெளிவிவகார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.

Popular

More like this
Related

2 ஆண்டு போர் முடிவுக்கு வந்தது: டிரம்ப் தலைமையில் இஸ்ரேல் – ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது: அடுத்து என்ன?

இஸ்ரேல் - காசா போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நேற்று எகிப்தில்...

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: தேடப்பட்டு வந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ...

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. வரையான பலத்த மழை

இன்றையதினம் (14) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்...