இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தினால் சுதந்திர தின நிகழ்வு

Date:

1990 முதல் காத்தான்குடியில் பல்வேறு சமய சமூக மனிதாபிமானப் பணிகளில் தன் கால் பதித்து சேவையாற்றி வரும் இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம் வழமை போன்று இம்முறையும் 75 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வை சிஐஜி பீச் கெஸ்ட் ஹவுஸ் வளாகத்தில்   சனிக்கிழமை கொண்டாடியது.

இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் கீழ் இயங்குகின்ற ஐந்து பாடசாலைகளின் மாணவர்கள் இந்த நிகழ்வுக்கு சிறப்பு சேர்த்தனர். பிரதம அதிதியாக காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ உதயசிறீதர் அவர்களும் ஏனைய அதிதிகளாக காத்தான்குடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், காத்தான்குடி போலீஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி, காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர், காத்தான்குடி நீர் வழங்கலா வடிகால் அமைப்புச் சபையின் பொறியாளர், கிராம சேவை உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் இஸ்லாமிய முன்மாதிரி பாடசாலை ஆண்கள் பிரிவு மற்றும் பெண்கள் பிரிவு அதிபர் உப அதிபர் ஆசிரியர்கள், அல்குர்ஆன் மனனப் பாடசாலைகளின் பொறுப்பாளர்கள், இரவு நேர கற்கை நெறியின் பொறுப்பாளர்கள், இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் நிர்வாகிகள் மற்றும் ஏனைய பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு மாணவர்களின் முழுமையான பங்குபற்றுதலுடன் இந்த நிகழ்வு மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.

இந்த நிகழ்வின் பிரதம அதிதி நிகழ்வில் பிரதான உரை ஆற்றியதுடன் இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் தலைவர் அவர்களினால் தலைமையுரை நிகழ்த்தப்பட்டது.

அத்துடன் அண்மையில் இஸ்லாமிய முன்மாதிரிப் பாடசாலை ஆசிரியர்களுக்காக நடாத்தப்பட்ட விசேட பயிற்சி பட்டறையில் கலந்து கொண்ட அனைத்து ஆசிரிய ர்களுக்கும் இந்த உயர்ந்த நாளில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

இங்கு உரையாற்றிய பிரதேச செயலாளர்,

இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் பல்வேறு வகையான பணிகளை மெச்சிப் பேசியதுடன் இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம் அதன் மனிதாபிமான பணிகளில் மீளவும் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி அதற்கு பிரதேச செயலகம் முழுமையான ஒத்துழைப்பை, ஆதரவை வழங்கும் என்றும் தெரிவித்தார்.

வருடா வருடம் மாணவ மாணவிகளின் உற்சாகமான பங்கு பற்றுதலுடன் நடைபெறும் இந்த தேசிய தின நிகழ்வு உண்மையில் மாணவர்கள் மத்தியில் நாட்டுப்பற்றையும் தேச விசுவாசத்தையும் தேசாபிமானத்தையும் விதைப்பதில், அவர்களை நற்பிரஜைகளாக உருவாக்குவதில் பெரும் பங்காற்றுகின்றது என்பதை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

அடுத்த 36 மணித்தியாலங்களில் வானிலையில் மாற்றம்!

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (06) மாலை 4.00 மணிக்கு வெளியிடப்பட்ட அடுத்த...

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு 950 தொன் நிவாரண பொருட்கள் வழங்கி வைப்பு.

டித்வா புயல் தாக்கத்தினால் பாரிய இழப்புகளை எதிர்நோக்கியுள்ள இலங்கை மக்களுக்காக தமிழ்...

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு 25,000 ரூபா நிவாரணத்தை பெறுவதற்கான வழிமுறைகள்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு அரசாங்கம் வழங்கும் 25,000 ரூபா நிவாரணத்தை பெறுவதற்கான...

இந்தியா வரலாற்றில் ஒரு கருப்பு நாள்: பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் இன்று!

பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று சனிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. டிசம்பர் 6, 1992...