உலக பணவீக்க தரப்படுத்தலில் இலங்கை சாதகமான முன்னேற்றத்தை கண்டுள்ளதாக சமீபத்திய புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.
ஜோன் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சர்வதேச பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹன்கின் கடந்த 16ஆம் திகதி வெளியிடப்பட்ட பணவீக்க தரப்படுத்தலின் பிரகாரம், இலங்கை 13ஆவது இடத்தில் உள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் உயர் பணவீக்கம் உள்ள முதல் 5 நாடுகளுக்குள் இலங்கையும் இடம்பெற்றிருந்த நிலையில், சமீபத்திய மாற்றம் சாதகமான முன்னேற்றமாக பார்க்கப்படுகின்றது.
கடந்த வருடம் ஜூன் மாத்தில் குறித்த தரப்படுத்தலில், உலகின் அதிக பணவீக்கம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தை பிடித்திருந்தது.