எதிர்வரும் செவ்வாய்க்கிழமை(21ஆம் திகதி) 12 மணிநேரம் நீர்வெட்டு!

Date:

வத்தளை உட்பட பல பிரதேசங்களுக்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி வத்தளை, ஹெந்தல, அல்விஸ் டவுன், வெலிக்கட முல்லை, கெரவலபிட்டிய, மாபோல, நாயக்கந்த, கலஹதுவா மற்றும் மருதானை வீதி ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

மேலும், ஹுனுபிட்டிய, வெடிகந்த, வெவெல்துவ, பிரஞ்சுவத்த, கிரிபத்கொட புதிய வீதி, பதிலியதுடுவ வீதி மற்றும் தலுபிட்டிய வீதியில் இருந்து அக்பர் டவுன் பாலம் வரை நீர் விநியோகம் தடைப்படும்.

களனி, பிரஞ்சுவத்த வீதி மற்றும் சரசவி மாவத்தையில் அவசர திருத்தப் பணிகள் நடைபெறுவதால் அப்பகுதிகளுக்கான நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...