எல்லை நிர்ணய சபையின் அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு!

Date:

தேசிய எல்லை நிர்ணய சபையினால் உருவாக்கப்பட்டுள்ள அறிக்கை வரும் செவ்வாய்க்கிழமை பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்படவுள்ளது.

மாவட்ட ரீதியாக தங்களது குழுவினால் பெறப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை பரிசீலனை செய்ததன் பின்னர் இந்த பணி இடம்பெற்றுள்ளது.

இதற்காக மாவட்ட ரீதியாக சென்று தகவல் பெறப்பட்டுள்ளதாக தேசிய எல்லை நிர்ணய சபையின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதிக்குள் இறுதி அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் எல்லை நிர்ணய சபையின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...