கற்பிட்டியில் சுற்றுலா விடுதி ஒன்றுக்கு அருகில் உள்ள கடற்கரையில் இன்று காலை 14 திமிங்கிலக் குட்டிகள் கரை ஒதுங்கியதாகவும் அதில் மூன்று திமிங்கிலங்கள் உயிரிழந்ததாகவும் கற்பிட்டி வனவிலங்கு தள பாதுகாப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
எஞ்சிய 11 திமிங்கிலக் குட்டிகள் மிகுந்த முயற்சியுடன் கடலுக்கு அனுப்பப்பட்டதாகவும் வனவிலங்கு தள பாதுகாப்பு அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்த திமிங்கிலங்கள் பைகலாட் கௌல்பஸ் இனத்தைச் சேர்ந்தவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.