‘புனித மிஃராஜ் இரவை’ முன்னிட்டு முஸ்லிம் சமய மற்றும் கலாசார திணைக்களம், அல்-மஸ்ஜிதுன் நஜ்மி ஜும்மா பள்ளிவாசல் மற்றும் இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையும் இணைந்து நடாத்திய விஷேட நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
இந்நிகழ்வு கொழும்பு அல்-மஸ்ஜிதுன் நஜ்மி ஜும்மா பள்ளிவாசலில், முஸ்லிம் திணைக்களத்தின் பணிப்பாளர் அல்-ஹாஜ் பைசல் ஆப்தீன் தலைமையில் நடைபெற்றது.
நூற்றாண்டு விழாவை கொண்டாடும் குறித்த பள்ளிவாசலில் இருந்து இந்நிகழ்வுகள் யாவும் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் நேரடி ஒலிபரப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.