சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன ஹந்துன்கொட பிணையில் விடுதலை!

Date:

சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன ஹந்துன்கொட இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு டுபாயில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த போது,  குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த காலங்களில், யூடியூப் சமூக ஊடகங்கள் மூலம் தற்போதைய அரசாங்கத்தின் காவல்துறை அமைச்சர் திரான் அலஸ் மற்றும் சுற்றுலா இராஜாங்க அமைச்சர் திருமதி டயானா கமகே குறித்து பல சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்டார்.

கடந்த காலங்களில் இணைய ஊடகங்கள் ஊடாக கருத்துக்களை வெளியிட்ட பலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இதேவேளை, பிரபல யூடியூப் சேனலை நடத்தி வந்த செபால் அமரசிங்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

 

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...