தபால் மூல வாக்களிப்பு ஒத்திவைப்பு: இன்று விசேட கலந்துரையாடல்!

Date:

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஒத்திவைக்கப்படுமா, இல்லையா என்பதை தீர்மானிக்கும் விசேட கலந்துரையாடலொன்று இன்று(14) தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடைபெறவுள்ளது.

தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் பொதுச் செயலாளர்களின் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளும் இன்று(14) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளன.

கட்டணம் செலுத்தப்படாவிட்டால் தபால் வாக்குச்சீட்டுகளை விநியோகிக்க முடியாதென அரச அச்சகர் அறிவித்ததாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சு தீர்மானம்!

2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டினுள்...

கிழக்கு, வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை நிலைமை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கும்

இலங்கையின் கிழக்கில் உருவாகியுள்ள குறைந்த அளவிலான வளிமண்டலக் குழப்பம் காரணமாக, கிழக்கு,...

பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் பிரதித் தலைவர் தாரிக் ரஹ்மான்- அமைச்சர் விஜித ஹேரத் இடையில் சந்திப்பு.

பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் பிரதி தலைவரும் முன்னாள் பிரதமர் கலேதா ஜியாவின்...