துருக்கி-சிரியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியது!

Date:

துருக்கியில் கடந்த 6ஆம் திகதி அடுத்தடுத்து ஏற்பட்ட  நிலநடுக்கங்களால் துருக்கி மற்றும் அண்டை நாடான சிரியாவில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.

கட்டடங்கள்  தரைமட்டமாகியுள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. துருக்கியில் மட்டும்9,700 க்கும் அதிகமானோர்  உயிரிழந்துள்ள நிலையில், சிரியாவில் பலி எண்ணிக்கை ஆயிரத்து 800 -ஐ கடந்துள்ளது.

இரு நாடுகளிலும் சுமார் 42 ஆயிரம் பேர் படுகாயமடைந்துள்ளனர். கட்டட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

இதனிடையே துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 10 மாகாணங்களில் 3 மாதங்களுக்கு அவசரகால நிலையை பிரகடனப்படுத்துவதாக அதிபர் எர்டோகன் (Erdogan) தெரிவித்துள்ளார்.

மீட்பு பணிகளை விரைவாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்ள 50,000 க்கும் மேற்பட்டோரை அனுப்ப இருப்பதாகவும் கூறினார்.

மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில் அங்கு இரண்டாவது நாளாக இருமுறை நிலநடுக்கம் ஏற்பட்டது.

தென் கொரியா, ஈரான், கத்தார் உள்ளிட்ட நாடுகள் துருக்கிக்கு நிவாரண நிதி, மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்களை அனுப்ப தொடங்கியுள்ளன. நிலநடுக்கத்தால் உயிரிழந்த மக்களுக்கு பல்வேறு நாட்டினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நிலநடுக்கம் ஏற்பட்ட துருக்கி மற்றும் சிரியாவில் 2 கோடியே 30 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

பெப்ரவரி மாதத்திற்கான ‘அஸ்வெசும’ முதியோர் கொடுப்பனவு வங்கிக் கணக்குகளில்!

பெப்ரவரி மாதத்திற்கான ‘அஸ்வெசும’ முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழான முதியோர்...

பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்; ‘தார்மீக கோழைத்தனம்’ என காங்கிரஸ் விமர்சனம்

இஸ்ரேலுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கையை இந்தியாவின் எதிர்க்கட்சிகள்...

சாதாரண தரப் பரீட்சை இன்றுடன் நிறைவு: பரீட்சைக்குப் பின் மோதல்களைத் தவிர்க்க நடவடிக்கை

கடந்த 17ஆம் திகதி ஆரம்பித்த O/L பரீட்சை இன்று (26) நிறைவடையவுள்ளது. O/L...

பிரதமர் மோடி, இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் உயரிய கௌரவமான ‘Speaker of the Knesset Medal’ஐ பெற்றார்.

பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். நேற்று அவர் அந்நாட்டு...