துருக்கி மற்றும் சிரியாவின் எல்லைப் பகுதிகளில் அடுத்தடுத்து நிகழ்ந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிர்சேதங்கள் மற்றும் பேரழிவுகளுக்காக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது ஆழ்ந்த கவலையையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் வெளியிட்ட இரங்கல் செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கும் அதேவேளை பாதிக்கப்பட்ட மக்கள் கூடிய விரைவில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என்றும் அதற்கான தைரியத்தையும் மன வலிமையையும் அல்லாஹு தஆலா அவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கிறோம்.
அப்பகுதி வாழ் மக்களின் உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாத்து சந்தோஷத்தையும் முழுமையான சுதந்திரத்தையும் அம்மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் உளமாரப் பிரார்த்தனை செய்கிறோம்.
மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி புரிய முன்வருமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்வதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.