தேசிய சமாதானப் பேரவையின் இரத்தினபுரி மாவட்ட சர்வ மதக்குழு கிழக்கு மாகாணத்திற்கு விஜயம்

Date:

தேசிய சமாதான பேரவையின் இரத்தினபுரி மாவட்ட சர்வமதக்குழு கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ளது.

அதற்கமைய தேசிய சமாதானப் பேரவையின் இரத்தினபுரி மாவட்டம் கொடகவெல மற்றும் இறக்குவான பிரதேச சர்வ மதக் குழு உறுப்பினர்கள் இன நல்லிணக்க பரிமாற்று நல்லுறவுக்கான விஜயமாக கிழக்கு மாகாணத்திற்கு சென்றுள்ளனர்.

இன நல்லிணக்க பரிமாற்று நல்லுறவுக்காக கிழக்கு மாகாணத்திற்கு வருகை தந்துள்ள சர்வ மத குழு உறுப்பினர்கள் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி அல் அக்‌ஷா பள்ளிவாசலில்  சர்வமதக்குழு அங்கத்தவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

மட்டக்களப்பு பிரதேச சர்வ மத குழு இணைப்பாளரும், மட்டக்களப்பு வண்ணத்துப் பூச்சி சமாதான பூங்கா திட்ட முகாமையாளருமான து. நகுலேஸ்வரன் ஏற்பாட்டில் காத்தான்குடி அல் அக்‌ஷா பள்ளிவாசலில் இடம்பெற்ற கலந்துரையாடலில் காத்தான்குடி பிரதேச செயலாளர் உதய ஸ்ரீதரும் பங்கேற்றார்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...