தேசிய சூரா சபையின் தேசிய தின நிகழ்வு!

Date:

தேசிய சூரா சபையின் தேசிய தின நிகழ்வுகள் கொழும்பு 07ல் அமைந்துள்ள ஜாவத்தை ஜும்ஆ பள்ளிவாயலில் தேசிய தினமான 4 ஆம் திகதி மாலை இடம்பெறவுள்ளன.

மேற்படி நிகழ்வில் பள்ளிவாயல் முன்றலில் தேசிய கொடி ஏற்றப்பட்டு பின்னர் அங்கு மர நடுகையும் இடம் பெறும்.

சபையின் தலைவர் சட்டத்தரணி அஸூர் அவர்களது தலைமையில் இடம் பெறவுள்ள நிகழ்வுகளில் அதன் நிறைவேற்று குழு, செயலகக் குழு, பொதுச்சபை உறுப்பினர்கள், ஜாவத்தை ஜும்ஆ பள்ளிவாயல் நிர்வாகிகள் உட்பட உலமாக்கள், புத்திஜீவிகள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இலங்கை நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு எல்லாத் துறைகளிலும் வீழ்ச்சி நிலையில் இருப்பதினால் மேற்படி நிகழ்வு “நாம் அனைவரும் ஒன்றிணைந்து நம் தாய்நாட்டைக் கட்டியெழுப்புவோம் என்ற மகுடத்தில் இடம்பெறவுள்ளது. நான்கு மதங்களையும் சேர்ந்த மதத் தலைவர்கள் நாட்டை கட்டி எழுப்புவதன் அவசியம் தொடர்பான தத்துமது மதங்களது கருத்துக்களை உள்ளடக்கி உரைகளை நிகழ்த்தவுள்ளனர்.

சிங்கள மொழியின் இஸ்லாமிய தஃவா பணியாளர் மௌலவி அம்ஹர் ஹகம்தீன், சின்மயா மிஷனைச் சேர்ந்த சுவாமி குணாதீதானந்த சரஸ்வதி ஆகியோருடன் பெளத்த, கிறிஸ்தவ மத குருக்களும் உரைகளை நிகழ்த்தவுள்ளனர்.
மேற்படி நிகழ்வில் பொதுமக்களும் கலந்து கொள்ள முடியும் என சூரா சபை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

பேரிடரால் சேதமடைந்த மத ஸ்தலங்களை கட்டியெழுப்ப ஹஜ் குழுவிடமிருந்து ரூ. 5 மில். நன்கொடை

அண்மையில் ஏற்பட்ட இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்ட மத ஸ்தலங்களின் மறுசீரமைக்கும் பணிகளுக்காக,...

இலங்கையில் அடுத்த சில நாட்களுக்குக் கனமழை எதிர்பார்ப்பு

இலங்கையில் அடுத்த சில நாட்களுக்கு, குறிப்பாக பெப்ரவரி 10 வரை கனமழை...

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை!

மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி,தெற்கு மற்றும் சப்ரகமுவ...

பேரிடரால் பாதிக்கப்பட்ட தொழில்துறைக்கு ரூ. 200,000 வழங்க முடிவு!

அண்மைய பாதகமான வானிலையால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் அரசாங்கத்தின் அவசர...