தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் நேற்றை ய(26) தினம் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட நிலைமையை அடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நிவித்திகல பிரதேச சபைக்கான வேட்பாளராக களமிறங்கியிருந்த நிமல் அமரசிறி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தேர்தலைப் பிற்போடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று (26) பிற்பகல் தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிஸாரினால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதன்போது காயமடைந்த 28 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.