அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது
அதற்கமைய தேசிய மக்கள் சக்தியால் முன்னெடுக்கப்படவுள்ள இந்த போராட்டம் இன்று மாலை 3 மணியளவில் விகாரமகா தேவி பூங்காவில் நடைபெறவுள்ளது.
உள்ளுராட்சி மன்றங்களின் வாக்கெடுப்பை ஒத்திவைக்கும் முயற்சி, வரிக் கொள்கை உள்ளிட்ட பல விடயங்களை முன்னிறுத்தி இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
நாடு முழுவதிலுமிருந்து தனது உறுப்பினர்கள் பலர் தம்முடன் இணைவார்கள் என்றார்.