தேர்தலுக்கு நிதி வழங்குவதில் பாரிய சிக்கல்கள் உள்ளன: நிதி அமைச்சின் செயலாளர்

Date:

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான நிதியினை வழங்குவதில் பாரிய சிக்கல்கள் இருப்பதாக நிதி அமைச்சின் செயலாளர், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

நிதியமைச்சின் செயலாளர் மற்றும் நிதி அமைச்சின் உயர் அதிகாரிகள் இன்று(வெள்ளிக்கிழமை) தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இதன்போதே அவர்கள் இதுகுறித்து அறிவித்துள்ளதாக  தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

அரசாங்க செலவினங்களைக் குறைப்பதற்காக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி, நாட்டில் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே நிதி ஒதுக்க முடியும் என நிதி அமைச்சின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்தியாவசியமற்ற அனைத்து செலவுகளுக்கும் நிதி அமைச்சரின் ஒப்புதல் அவசியம் என மற்றொரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு நிதி வழங்குவதில் சிக்கல்கள் இருப்பதாக நிதிச் செயலாளர் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

இன்றையதினம் (11) நாட்டின் கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை, அம்பாந்தோட்டை...

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...