நீண்டகால நட்புறவை தொடர்ந்து பேண நடவடிக்கை எடுப்பேன்: சுதந்திர தின விழாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி வாழ்த்து!

Date:

இலங்கையின் 75ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்துடன் இணைந்ததாக இலங்கைக்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

75ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்விற்கும், இலங்கை மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தவாறு அமெரிக்க ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த, அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான உப இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நூலண்டினால் ஜனாதிபதியிடம் இந்த வாழ்த்துச் செய்தி கையளிக்கப்பட்டுள்ளது.

இரு நாட்டு மக்களின் அமைதியான, வளமான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்திற்காக, அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் தொலைநோக்கையும் தொடர்ந்து பேணுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் 75ஆவது தேசிய சுதந்திரக் கொண்டாட்டத்துக்கு இணையாக அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கும் 75 ஆண்டுகள் நிறைவடைவதாகவும், இந்த நீண்டகால உறவு பிராந்திய மற்றும் உலகளாவிய அமைதி மற்றும் சுபீட்சத்தை மேம்படுத்த உதவும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனநாயக நாடுகள் என்ற வகையில் இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு ஒற்றுமை, சுதந்திரம் மற்றும் சமத்துவத்தின் ஊடாக மேலும் வலுவடைவதாக பைடன் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...