பதவி விலகினார் மயந்த திஸாநாயக்க!

Date:

அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பதவியில் இருந்து தாம் விலகவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் சபாநாயகருக்கு இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற தெரிவுக்குழு கூட்டத்தில் அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக மயந்த திஸாநாயக்கவை ஆளும் கட்சி முன்மொழிந்தது. அந்த பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவை எதிர்க்கட்சிகள் பரிந்துரைத்தது.

எனினும், ஆளுங்கட்சியினரால் பரிந்துரைக்கப்பட்ட மயந்த திஸாநாயக்க பெரும்பான்மை வாக்குகள் மூலம் அரசாங்க நிதி தொடர்பான குழுவின் (COPF) தலைவராக தெரிவானார். பின்னர், இந்த விடயம் பாராளுமன்றத்திலும் பொது வெளியிலும் பேசு பொருளானது.

இந்த நிலையில், மயந்த திஸாநாயக்க குறித்த பதவியிலிருந்து விலகும் தீர்மானத்தை அறிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...