புத்தளத்தில் இடம்பெற்ற ‘Mobile Photography’ ஒரு நாள் பயிற்சி செயலமர்வு!

Date:

‘mobile photography’ தொடர்பான ஒரு நாள் பயிற்சி செயலமர்வு நேற்று புத்தளம் நகரில் அமைந்திருக்கின்ற science academy வளாகத்திலே இடம்பெற்றது.

Puttalam Online , பஹன அகடமி மற்றும் ‘நியூஸ்நவ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த செயலமர்வை நடத்தியிருந்தது.

இதன்போது, இந்த செயலமர்வை நடத்துவதற்காக இஸ்தான்புல் இப்னு கல்தூன் பல்கலைக்கழகத்தின் முதுமானித்துறை மாணவரும் அதே பல்கலைக்கழகத்தின் media center னுடைய உதவி நிபுணருமான ஏ.எம். அப்துர் ரஹ்மான் வளவாளராக பங்குபற்றியிருந்தார்.

இலவசமாக நடத்தப்பட்ட இந்த செயலமர்வில் ‘Mojo’ பயிற்சியை பூர்த்தி செய்தவர்கள் உட்பட 29 தமிழ், முஸ்லிம் இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

இந்த நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்வதற்கு Puttalam Online இனுடைய பணிப்பாளர், ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளர் இஸட். ஏ ஸன்ஹீர் அவர்களும்,அதன் நிர்வாக உறுப்பினர் சட்டத்தரணி,அஷ்ஷேக் பஸ்லுர்ஹுர் ரஹ்மான் (நளீமி) அவர்களும் முழுமையான பங்களிப்பை வழங்கியிருந்தனர்.

இந் நிகழ்வில் துருக்கி ஸகாரியாவில் சோசியல் மீடியா துறையில் பணியாற்றுகின்ற ஏ.எம். அப்துல்லாஹ் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.

நிகழ்வின் முடிவில் செயலமர்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...