எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பொதுஜன பெரமுனவுக்கு வாக்களிக்க 60 இலட்சம் மக்கள் காத்திருப்பதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் வேட்பாளர்கள் தமது அதிகார எல்லைக்குட்பட்ட அடிமட்டத்திற்குச் செல்ல முடியாத நிலை தற்போது இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.