மருதானை, டெக்னிக்கல் சந்திக்கு அருகில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
ஏராளமான பொலிஸார் மற்றும் கலகத்தடுப்பு பிரிவினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.